கல்யாண களேபரம் – Part-2
மார்ச் 4, 2009 at 9:09 பிற்பகல் மறுமொழியவும்
பரோட்டா சாப்பிட போனத பத்தி சொன்னேன்ல..அதுக்கு முன்னாடி சுவாரசியமான சம்பவம் ஒண்ணு நடந்துச்சு..எங்கள மாதிரி வயசுப் பசங்களோட மானத்த வாங்குறது யாருன்னு ஒரு பட்டியல் போட்டோம்னா யாரு மொதோ மூணு இடத்த புடிப்பாங்கனு நினைக்கிறீங்க..???
நான் சொல்றேன்..
மூணாவது இடம் எங்கள பெத்தவங்களுக்குதான்..குடும்ப நண்பரோட கல்யாணத்துக்குனு கூட்டிட்டு போயிட்டு, அந்த அங்கிள் பையன் டாக்டருக்கு படிச்சுட்டு லண்டன்ல இருக்கான்..இந்த ஆன்டி பொண்ணு கம்பியூட்டர் படிச்சிட்டு அமெரிக்கவுல இருக்கா..அப்டினு நம்பளாண்ட சொல்லிட்டு அங்க போய் நம்பள பத்தி அந்த உதவாக்கர 2 பேப்பர்ல கோட்டு அடிச்சிட்டு ஊர சுத்திக்கிட்டு இருக்குதுனு மாட்டி விட்டுடுவாங்க…(Note: இது எல்லா பெற்றோருக்கும் பொருந்தாட்டினாலும், இப்டி மானத்த வாங்குறதுக்கு, அண்ணா, அக்கா, தங்கச்சி, மாமானு யாராவது ஒருத்தர் இருப்பாங்க..அவங்களுக்கும் இந்த இடம் பொருந்தும்.)
ரெண்டாவது இடம், நம்ம கூடவே இருந்து குழி பறிக்குற கூட்டம்.. நம்ம சகாக்கள்.. நமதருமை நண்பர்கள்.. “நீ ஜெயிலுக்கு போனால் உன் நண்பன் உன்ன பெயில்ல எடுப்பான், ஆனால் உன் பெஸ்டு நண்பன் உன் பக்கத்துல உக்காந்துகிட்டு “கொசு அதிகம்டா மாப்ள” அப்படின்னு கமண்ட் அடிப்பான்”, அப்டி இப்டின்னு sms அனுப்பிட்டு, நாம டாவு விடுற பொண்ணு வர வேண்டாம், அவளோட perfume அடிச்சாவே கூட போதும்..அப்டியே ஒரு அந்தர் பல்டி அடிச்சு, மொத்தமா ஒரு கூட்டம் அமச்சு குலவ சத்தம் போட்டு பானய வச்சு ‘பொங்கலோ பொங்கல்’னு பொங்கிடுவாய்ங்க…பாசக்கார பய புள்ளங்க…
மொதோ இடத்த அடிச்சுக்க ஆளே கிடையாது…தனி ஆளா நின்னு ஒரு பசங்க கூட்டத்தயே கலாய்க்கிற தெகிரியசாலி ஆளுங்க இவங்க..பதிலே சொல்ல முடியாத படி கேள்வி கேப்பாங்க..அதுக்கு எதிர்பாக்கவே முடியாதபடி ஒரு பதில சொல்லி நம்ம வாயடச்சுட்டு ஒண்ணுமே நடக்காத மாதிரி ஓடிப்போயிடுவாங்க..மொளச்சு மூணு இல விடாம, 1ஆங்கிளாஸ் 2ஆங்கிளாஸ் படிச்சுகிட்டு காலேஜ் போற நம்மள பாத்து இந்த பொடிசுங்க அடிக்கிற கிண்டல் இருக்கே…!!! அதுலயும் பசங்களோட மானத்த வாங்குறதுல இந்த குட்டி பொண்ணுங்களுக்கு இருக்குற ஆசயே தனி!
இப்ப எதுக்கு இத சொல்றேன்னா, நம்ம CSE ராஜேஷோட மானம் மட்டுமல்லாம என்னோட மானத்தயும் சேத்து ஒரு குட்டி பொண்ணு வாங்கிட்டு போயிட்டா..!வீரா வீட்டுக்கு வந்த உடனே, ராஜேச பாத்து, “நீங்க யாரு”ன்னு கேட்டா..சரி கொழந்த கேக்குதேன்னு ராஜேஷ், “நான் வீராவோட friend”னு சொன்னான். பதிலுக்கு அவ, “நீங்க வீராவோட friendஆ enemyஆ”ன்னு கேட்டா. “எதுக்கு இப்படி கேக்குற”ன்னு ராஜெஷ் கேட்டதுக்கு அவ சொன்ன பதில், “இல்ல, வீரா இவ்ளோ whiteஆ இருக்காரு, நீங்க இவ்ளோ blackஆ இருக்கீங்க..அதான் கேட்டேன்..!”. (முடியல..!) என்னோட மானம் போனது இன்னொரு கதை..வீரா வீட்டுக்கு வந்ததும் அவங்க வீட்ல இருக்குற chandelier லைட்ட அண்ணாந்து பாத்தேன்..அந்த பொண்ணு என்ன பாத்து ஒரு மாதிரி சிரிச்சுட்டு போனா..இத பாத்த பசங்க எல்லாம் மொத்தமா சிரிச்சுட்டாங்க..அப்றமா தான் ‘ஏதோ பட்டிக்காட்டான் மிட்டாய் கடைய பாத்த மாதிரி பாக்கறான் பாரு’னு அவ சிரிச்சுட்டு போனது எனக்கு புரிஞ்சிது..என்ன பண்றது..எல்லாம் விதி.
சின்ன பொண்ணுங்ககிட்ட மாட்டிக்கிட்டு முழிக்குறது ஒண்ணும் எனக்கு புதுசில்ல. போன வருசம், EEE சுமிதா-வோட கல்யாணத்துக்கு கோவை போயிருந்தேன். அங்க ஹரிணி’னு ஒரு சின்ன பொண்ணு என்னோட மொபைல பாத்துட்டு தரேன்னு சொல்லி வாங்கினா. அதுல கேமரா இருக்குறத பாத்ததும், மொபைல தூக்கி போட்டு உடச்சுடுவேன்னு என்ன பயமுறுத்தி, குரங்கு மாதிரி, தலைல கொம்பு வச்சு மாடு மாதிரி, funny face பண்ணி, dance ஆட வச்சு எல்லாம் photo எடுத்து ஒரு அரை மணி நேரம் எனக்கு ஒரு ட்ரில்லு குடுத்தாளே பாக்கணும், அன்னிக்கில இருந்து இன்னிக்கு வரைக்கும் கேமரா மொபைலயே தொடல..ஒரு சாதாரண FM மொபைல வச்சுகிட்டு காலத்த ஓட்டிக்கிட்டு இருக்கேன்..
(நல்ல வேளையா அந்த மொபைல் எங்கிட்டயே திருப்பி வந்ததால தேவை இல்லாத (!) போட்டோவை எல்லாம் deleeeet பண்ணிட்டேன்…!
)
இன்னொரு நாள், IITல ஒரு வாண்டு கூட பேசிக்கிட்டு இருந்தேன்..என்ன பாத்து, “அங்கிள், விஜயோட பையன் நடிச்சா அந்த படத்துக்கு என்ன பேரு வப்பாங்க”னு கேட்டா. எனக்கு அந்த அளவு விவரம் பத்தாதனால தெரியலனு உண்மைய ஒத்துக்கிட்டேன். அவ சொன்னா, “அய்ய..இது கூட தெரியாதா…? குருவிக்குஞ்சு-னு வப்பாங்க” அப்டின்னு சொல்லிட்டு போனா..! (எல்லாம் என் நேரம்..!!!) 2 நாள் கழிச்சு அதே ஜொக்கு ஒரு smsஆ வந்திச்சு. ஆஹா, அதுக்குள்ள ஊருக்கே தெரிஞ்சு போச்சுயான்னு நெனச்சுக்கிட்டே நடைய கட்டுனேன்..
இதுக்கெல்லாம் மேல, கோயம்முத்தூர்ல மொதோ நாள் காலேஜுக்கு பைக்க நான் start பண்றதுக்குள்ள மாடில இருந்து அந்த சஞ்சு பையன் சிரிச்ச சிரிப்பு இருக்குதே, அதுக்கப்புறம் என்னோட புகழ் (!!!) நம்ம நண்பர்கள் மத்தியில எக்கசக்கமா எகிறிடிச்சு..!
(முன்ன பின்ன பைக் ஓட்டி பழக்கமில்ல..அது என்னோட தப்பா என்ன..???)
சரி இந்த கதையெல்லாம் இருக்கட்டும்..கல்யாண நாள்ல நடந்த நிகழ்ச்சிய அடுத்த பதிவுல சொல்றேன்..
–to be continued…(களேபரம் தொடரும்..)
Entry filed under: பயணங்கள் முடிவதில்லை.... Tags: .
Trackback this post | Subscribe to the comments via RSS Feed