veera won doubles finals…

நண்பர்களே… நானும் வீராவும், நேத்து இரவு இணைய தளம் வழியா அடிச்ச அரட்டை(chat)யில் இருந்து ஒரு பகுதியை இங்க பதிவிடுறேன்..

=========================================================

10:25 PM Veera: mapla i won mixed doubles match in badminton

me: என்னாது, mixed doubles-aa..???நடத்து மகனே நடத்து…

Veera: பொறாம படாதே நண்பா..

10:27 PM me: பொறாமையா..என் labஏ புகையா ஆயிடுச்சு போ… நீ குடுத்து வச்சவன்..

Veera: அந்த பொண்ண service போட்டுட்டு ஒரு ஓரமா போயி நிக்க சொல்லிட்டேன்.. and i managed whole game

me: hahahahahahhah..sooooperruuuu

Veera: and same on the other side

me: oh..அது இத விட soooperruuuu

Veera: so we played singles onli in the name of mixed doubles

10:28 PM me: என்ன கொடுமை சார் இது…????

Veera: i used to hit to other side gal and man on other side used to hit to gal in my side

10:29 PM me: அய்யோ அய்யோ….

Veera: so both me and man on other side will run shouting “leave it” ஒரே தமாசா இருந்திச்சு..

me: இந்த பொழப்புக்கு tongueஅ pluck பண்ணிக்கலாம்..

10:30 PM Veera: from tomorrow or monday doubles is starting and from 3rd june singles is there

me: leave itனு சொல்லிக்கிட்டே ஒரு தடவையாவது அந்த பொண்ணு மேல இடிச்சியா..??

Veera: இல்ல..

me: waste…போடா…

Veera: leave itனு சொன்னா அந்த பொண்ணு courtஐ விட்டு வெளில போய் நின்னுக்கும்

me: cha.. சுத்தம்…

10:31 PM Veera: so tht i can hit the cork easili totalli there were 14 teams all team gals are like this onli no one knew to play.. atleast these two served better

me: oh…எல்லாரும் ஒரே குட்டைல ஊரின மட்டைங்க தானா..

10:32 PM Veera: mmm… second roundல ஒரு பொண்ணு மேல smash அடிச்சு அடிச்சு கிட்டத்தட்ட அது கண் கலங்கி அழுவுற நிலமைக்கு வந்திடிச்சு..

10:33 PM we won that match as game-13..in that when the points were 10-10 there were 13 service breaks and i hit at that girl for more than 15 times overall மூணு முறை முகத்துல அடி விழுந்தது, அதுவும் oru jump smash

me: இந்த பொம்பள பாவம் உன்ன சும்மா விடாதுடா… இதுக்கெல்லாம் சேத்து வச்சு கல்யாணத்துக்கு அப்புறம் உனக்கு கிடைக்கும்டா… சப்பாத்திக்கட்டையால….

10:35 PM Veera: நாங்க சப்பாத்திக் கட்டை வாங்க மாட்டோம், அந்த pressing m/c வாங்கிடுவோம்.. problem solved

me: tht one will valichify more than the chappathi kattai..

10:36 PM நீ செத்த..ஒரு மதுரைக்காரி கிட்டயோ இல்ல திருநெல்வேலிக் காரி கிட்டயோ மாட்டின, நீ காலி மவனே…

Veera: u know meaning of madurai and chidambaram in home language???

me: what..???

10:37 PM Veera: who is the prime god in these places? veetla madurai means gal is ruling..chidambaram means man is ruling… code word

me: podaaanngg…அது எல்லாம் godக்கு மட்டும் தான்.. நம்மளுக்கு எல்லாம் ulta தான்..

10:38 PM எல்லார் வீட்லயும் மதுரை தான்டா… no chidambaram…

Veera: i will break this rule

me: veera, நீ ஒரு அப்பாவி டா..

10:39 PM ஏதாவது எடக்கு மொடக்கா try பண்ணி வாங்கிக் கட்டிக்காத…

Veera: i will tell my future wife that we can share the decision making u take small decision like which tv, washing m/c fridge and all

10:40 PM i will take big decision like whether US war on afgan is ok or not, and all

me: hahahaihihihihi…LOL…. grr88888 idea… keep it up… :) :P

10:41 PM Veera: whois taking big big decisions? me…. so chidambaram at home

me: ஆமாமாமாமா….

Veera: problem solved

me: suuuubbberrrrbu….

10:42 PM Veera: நீயும் ஏதோ advice-ங்கற பேர்ல ஏதேதோ சொன்ன, இது எப்டி இருக்கு… this is called advice

me: இது தான் கலக்கல் போ…

Veera: இதெல்லாம் note பண்ணிக்க..

me: நான் இத follow பண்றேன்…கண்டிப்பாக…!

=======================================================

முற்றும்.

பி.கு.: ஆங்கில எழுத்துக்களால் எழுதப் பட்ட தமிழ் வாசகங்களை, தமிழ் எழுத்துக்களாக மாற்றியதைத் தவிர வேறு எதையும் நான் மாற்ற வில்லை.

:)

மே 15, 2009 at 7:20 மு.பகல் 1 மறுமொழி

கல்யாண களேபரம் – Part 3

கொஞ்ச நாளுக்கு அப்புறமா எழுதுறேன். என்ன பண்றது..Project முடியற நெலமயில இருக்கறதால அதுல கொஞ்சம் அதிகமா கவனம் செலுத்த வேண்டியதா போச்சு.

Anyway, கல்யாணத்தன்னைக்கு காலைல வீரா மண்டபத்துக்கு வரதுக்கு முன்னாடியே நாங்க எல்லாரும் மண்டபத்துக்கு வந்துட்டோம். நாங்க சீக்கிரமே கிளம்பிட்டதால, வீரா என்னோட கைல ஒரு பொட்டலத்த குடுத்து அம்மாகிட்ட குடுத்துடுடா-ன்னு சொன்னான். அது கோலமாவு-னு நினைக்குறேன். எல்லாரும் மண்டபத்துல இருந்து அப்படியே ஊருக்கு கிளம்புற திட்டத்துல இருந்ததால எங்களோட பயணப்பையயும் கூடவே எடுத்துக்கிட்டு கிளம்பிட்டோம். அங்க photo எடுக்கலாம்னு என்னோட cameraவ நான் என்னோட தோள்ல மாட்டிக்கிட்டு வந்துட்டேன். மண்டபத்துல அம்மா, பொண்ணோட அறைல இருந்தாங்க. நானும் Saiயும் அந்த கோல மாவு பொட்டலத்த அம்மா கிட்ட குடுக்கறதுக்காக அங்க போனோம். உள்ள இருந்து பொண்ணோட மாமா ஒருத்தர் வந்தாரு. எங்க ரெண்டு பேரையும் பாத்துட்டு “பொண்ணு அலங்காரம் இன்னும் முடியல, ஒரு 5 நிமிசம் பொறுங்க”னு சொன்னார். கோல மாவுக்கும் பொண்ணு அலங்காரத்துக்கும் என்ன சம்பந்தம்-னு புரியாம நான் குழம்பி போய் நின்னப்ப, விசயம் என்னனு புரிஞ்சுக்கிட்டு sai “நாங்க photographer இல்ல, வீராவோட friends, அம்மாகிட்ட இந்த கோலப்பொடிய வீரா குடுக்க சொன்னான்”னு சொன்னான். அதுக்கப்புறம் தான் எனக்கு விசயம் புரிஞ்சுது. நான் வேற தோதா தோள்ல cameraவ மாட்டி இருந்தேனா…நாங்க தான் photographersனு மாமா முடிவே பண்ணிட்டார்..!!! :) :) :)

இன்னும் நெறய களேபரம் நடந்துச்சு..ஆனா 2 மாசம் ஆயிட்டதால பாதி விசயம் மறந்தே போயிடுச்சு.. :( இதுக்குதான் சொல்றது, அப்பப்போ பண்ண வேண்டிய வேலைய அப்பப்பவே பண்ணி முடிக்கணும்னு..!!!

Anyway, முக்கியமாக நடந்த விசயம் என்னன்னா..கல்யாணத்தன்னைக்கு வீரா முகத்துல இருந்த அபரிமிதமான சந்தோசம் தான். அங்க வந்த நண்பர்கள் அத்தன பேரும் கண்ணுலயும் அழகா பட்ட ஒரு matter அதுதான்..அப்புறமா வீராவே பசங்க கிட்ட சொல்லிட்டதாக ஒரு தகவல் வந்துச்சு..வீராவோட அப்பா “அடுத்து வீராவுக்கு பொண்ணு பாக்க ஆரம்பிக்கணும்”னு யார் கிட்டயோ சொன்னது வீராவோட காதுல விழுந்திடுச்சாம். அதான் அவ்ளோ சந்தோசம்னு வீரா “நம்பத்தகுந்த நண்பன்” ஒருத்தன் கிட்ட ஒத்துக்கிட்டான்..! ;)

(பார்க்க: http://picasaweb.google.co.in/guru.palani/VeeraSSisMarriage#5306386491549416450 )

கல்யாண நாளன்னைக்கும் நம்ம KP தான் கலக்கல் ஹீரோ..காலைல மண்டபத்துக்கு வெளியில இளநீர் குடிச்சப்போ KP குடுத்த “குடைக்குள் மழை” pose- ஆ இருக்கட்டும் (http://picasaweb.google.co.in/guru.palani/VeeraSSisMarriage#5306359281430315602), அங்க வந்த கல்யாணப் பொண்ணோட தோழிங்க கிட்ட எப்படி பூ குடுக்ந்துனு mujiக்கு சொல்லிக்குடுத்ததா இருக்கட்டும் (http://picasaweb.google.co.in/guru.palani/VeeraSSisMarriage#5306359947549539826), KP just rocks..!!! அவன் அடிச்ச கூத்த எல்லாம் கேட்டுட்டு/பாத்துட்டு அன்னிக்கு வந்த நண்பர்கள் எல்லாரோடவும் சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்க ஆரம்பிச்சிடுச்சு.

பத்தாகுறைக்கு கல்யாணம் முடிஞ்ச கையோட நான் சேலத்துக்கு தருண் வீட்டுக்கு போனேன். Hindu paper- ஓட main sheet ரெண்டு எடுத்து பக்கத்துல-பக்கத்துல விரிச்சு வச்சா எவ்வளவு பெருசு வருமோ அவ்வளவு பெருசா ஒரு desk நெறயா வகை வகையா சமைச்சு வச்சு “என்னடா மாப்ள, போன வாட்டி வந்தப்பயும் நீ ஒழுங்கா சாப்டல, இந்த வாட்டியாவது நல்லா சாப்பிடுடா..ஒன்னறை வருசம் கழிச்சு வந்திருக்க, நல்லா நெறய போட்டு சாப்பிடுடா”ன்னு எனக்கு ஊட்டாத குறையா சாப்பிட வச்சு ஒரு வழி பண்ணிட்டான்..இதுல அவனோட wife வேற, “ஏண்ணா, சாப்பாடு நல்லா இல்லையா?” அப்டினு sentiment- ஆ வேற மடக்கிட்டா. அன்னிக்கு மத்தியானம் அங்க சாப்பிட்டதுதான்..அடுத்த நாள் ராத்திரி வரைக்கும் எனக்கு பசிக்கல..!!!

Atlast, 24 மணி நேரம் 24நொடி போல படபடன்னு வேகமா பொயிடுச்சு. IITல செம டைட்டா project போற நேரத்துல இத மாதிரி எனக்கும் ஒரு break ரொம்ப தேவைப் பட்டுச்சு. எக்கச்சக்கமா சிரிச்சு, விட்டுட்டு போறப்போ இத மாதிரி அடுத்து எப்ப ஒரு வாய்ப்பு கிடைக்கப்போகுதோனு ஒரு ஏக்கத்தோட எல்லாரும் பிரிஞ்சு கிளம்பினோம்..இது என் வாழ் நாளில் இன்னொரு மறக்கமுடியாத நாளா பதிஞ்சிருச்சு.

இது போல இன்னோரு chanceக்காக நான் wait பண்ணிக்கிட்டு இருக்கேன்…!!!

April 23, 2009 at 5:05 பிற்பகல் மறுமொழியவும்

சில சிந்தனைகள்…

சில நாட்களுக்கு முன் நண்பன் ஒருவனிடமிடுந்து வந்த மின்னஞ்சலில் சில கூற்றுகள் கூறப் பட்டிருந்தன. இவை அனைத்தையும் என்னால் ஏற்க முடியாவிட்டாலும் பலவற்றை ஏற்றுக்கொள்ளத்தான் தோன்றியது.

உதாரணமாக 14ஆவது கூற்றை என்னால் ஒத்துக்கொள்ள இயலாது. பல நேரங்களில் ஞாயமான விசயங்களுக்காக கோபம் தோன்றும்..ஆனால் அக்கோபத்தில் மனிதன் செய்யும் செயல்கள் தாம் அநியாயமாக மாறிவிடும். இன்று உலகத்தில் பல நாடுகளில் நடக்கும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் போர்களே இதற்கு சாட்சி.

அதே போல் 31ஆவது கூற்றையும் என்னால் ஏற்க இயலாது. ஒரு வேளை இப்படியும் இருக்கலாம். அக்கருத்தை எழுதியவர் எதை மனத்தில் கொண்டு அதை எழுதினார் என்பது எனக்கு விளங்க வில்லை, ஆதலால் ஏற்க இயலவில்லை!

இதோ அக்கூற்றுகள்:

1. பேசும்முன் கேளுங்கள், எழுதும்முன் யோசியுங்கள், செலவழிக்கும்முன் சம்பாதியுங்கள்

2. சில சமயங்களில் இழப்புதான் பெரிய ஆதாயமாக இருக்கும்

3. யாரிடம் கற்கிறோமோ அவரே ஆசிரியர். கற்றுக்கொடுப்பவரெல்லாம் ஆசிரியர் அல்லர்.

4. நான் மாறும்போது தானும் மாறியும், நான் தலையசைக்கும்போது தானும் தலையசைக்கும் நண்பன் எனக்குத் தேவையில்லை. அதற்கு என் நிழலே போதும்!

5. நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!

6. நான் குறித்த நேரத்திற்குக் கால்மணி நேரம் முன்பே சென்று விடுவது வழக்கம். அதுதான் என்னை மனிதனாக்கியது.

7. நம்மிடம் பெரிய தவறுகள் இல்லை எனக் குறிப்பிடுவதற்கே, சிறிய தவறுகளை ஒப்புக்கொள்கிறோம்!

8. வாழ்க்கை என்பது குறைவான தகவல்களை வைத்துக்கொண்டு சரியான முடிவுக்கு வரும் ஒரு கலை.

9. சமையல் சரியாக அமையாவிடில் ஒருநாள் இழப்பு. அறுவடை சிறக்காவிடில் ஒரு ஆண்டு இழப்பு. திருமணம் பொருந்தாவிடில் வாழ்நாளே இழப்பு.

10. முழுமையான மனிதர்கள் இருவர். ஒருவர் இன்னும் பிறக்கவில்லை. மற்றவர் இறந்துவிட்டார்.

11. ஓடுவதில் பயனில்லை. நேரத்தில் புறப்படுங்கள்.

12. எல்லோரையும் நேசிப்பது சிரமம். ஆனால் பழகிக்கொள்ளுங்கள்.

13. நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய் இரு.

14. காரணமே இல்லாமல் கோபம் தோன்றுவதில்லை. ஆனால் காரணம் நல்லதாய் இருப்பதில்லை .

15. இவர்கள் ஏன் இப்படி? என்பதை விட, இவர்கள் இப்படித்தான் என எண்ணிக்கொள்.

16. யார் சொல்வது சரி என்பதல்ல, எது சரி என்பதே முக்கியம்.

17. ஆயிரம் முறை சிந்தியுங்கள். ஒருமுறை முடிவெடுங்கள்.

18. பயம்தான் நம்மைப் பயமுறுத்துகிறது. பயத்தை உதறி எறிவோம்.

19. நியாயத்தின் பொருட்டு வெளிப்படையாக ஒருவருடன் விவாதிப்பது சிறப்பாகும்.

20. உண்மை புறப்பட ஆரம்பிக்கும் முன் பொய் பாதி உலகத்தை வலம் வந்துவிடும்.

21. உண்மை தனியாகச் செல்லும். பொய்க்குத்தான் துணை வேண்டும்.

22. வாழ்வதும் வாழவிடுவதும் நமது வாழ்க்கைத் தத்துவங்களாக ஆக்கிக்கொள்வோம்.

23. தன்னை ஒருவராலும் ஏமாற்ற முடியாது எனச் செருக்கோடு இருப்பவனே கண்டிப்பாக ஏமாந்து போகிறான்.

24. உலகம் ஒரு நாடக மேடை ஒவ்வொருவரும் தம் பங்கை நடிக்கிறார்கள்.

25. செய்வதற்கு எப்போதும் வேலை இருக்கவேண்டும் . அப்போது தான் முன்னேற முடியும்.

26. அன்பையும் ஆற்றலையும் இடைவிடாது வெளிப்படுத்துகிறவர் ஆர்வத்துடன் பணிபுரிவர்.

27. வெற்றி பெற்றபின் தன்னை அடக்கி வைத்துக்கொள்பவன்,  இரண்டாம் முறையும் வென்ற மனிதனாவான்.

28. தோல்வி ஏற்படுவது அடுத்த செயலைக் கவனமாகச் செய் என்பதற்கான எச்சரிக்கை.

29. பிறர் நம்மைச் சமாதானப்படுத்த வேண்டும் என்று எதிர்பார்க்காமல், நாம் பிறரைச் சமாதானப்படுத்த முயற்சிக்க வேண்டும்.

30. கடினமான செயலின் சரியான பெயர்தான் சாதனை. சாதனையின் தவறான விளக்கம் தான் கடினம்.

31. ஒன்றைப்பற்றி நிச்சயமாக நம்ப வேண்டுமென்றால் எதையும் சந்தேகத்துடனே துவக்க வேண்டும்.

32. சரியானது எது என்று தெரிந்த பிறகும் அதைச் செய்யாமல் இருப்பதற்குப் பெயர்தான் கோழைத்தனம்.

33. ஒரு துளி பேனா மை பத்து இலட்சம் பேரைச் சிந்திக்க வைக்கிறது.

:)

April 23, 2009 at 2:45 பிற்பகல் மறுமொழியவும்

கல்யாண களேபரம் – Part-2

பரோட்டா சாப்பிட போனத பத்தி சொன்னேன்ல..அதுக்கு முன்னாடி சுவாரசியமான சம்பவம் ஒண்ணு நடந்துச்சு..எங்கள மாதிரி வயசுப் பசங்களோட மானத்த வாங்குறது யாருன்னு ஒரு பட்டியல் போட்டோம்னா யாரு மொதோ மூணு இடத்த புடிப்பாங்கனு நினைக்கிறீங்க..???

நான் சொல்றேன்..

மூணாவது இடம் எங்கள பெத்தவங்களுக்குதான்..குடும்ப நண்பரோட கல்யாணத்துக்குனு கூட்டிட்டு போயிட்டு, அந்த அங்கிள் பையன் டாக்டருக்கு படிச்சுட்டு லண்டன்ல இருக்கான்..இந்த ஆன்டி பொண்ணு கம்பியூட்டர் படிச்சிட்டு அமெரிக்கவுல இருக்கா..அப்டினு நம்பளாண்ட சொல்லிட்டு அங்க போய் நம்பள பத்தி அந்த உதவாக்கர 2 பேப்பர்ல கோட்டு அடிச்சிட்டு ஊர சுத்திக்கிட்டு இருக்குதுனு மாட்டி விட்டுடுவாங்க…(Note: இது எல்லா பெற்றோருக்கும் பொருந்தாட்டினாலும், இப்டி மானத்த வாங்குறதுக்கு, அண்ணா, அக்கா, தங்கச்சி, மாமானு யாராவது ஒருத்தர் இருப்பாங்க..அவங்களுக்கும் இந்த இடம் பொருந்தும்.)

ரெண்டாவது இடம், நம்ம கூடவே இருந்து குழி பறிக்குற கூட்டம்.. நம்ம சகாக்கள்.. நமதருமை நண்பர்கள்.. “நீ ஜெயிலுக்கு போனால் உன் நண்பன் உன்ன பெயில்ல எடுப்பான், ஆனால் உன் பெஸ்டு நண்பன் உன் பக்கத்துல உக்காந்துகிட்டு “கொசு அதிகம்டா மாப்ள” அப்படின்னு கமண்ட் அடிப்பான்”, அப்டி இப்டின்னு sms அனுப்பிட்டு, நாம டாவு விடுற பொண்ணு வர வேண்டாம், அவளோட perfume அடிச்சாவே கூட போதும்..அப்டியே ஒரு அந்தர் பல்டி அடிச்சு, மொத்தமா ஒரு கூட்டம் அமச்சு குலவ சத்தம் போட்டு பானய வச்சு ‘பொங்கலோ பொங்கல்’னு பொங்கிடுவாய்ங்க…பாசக்கார பய புள்ளங்க…

மொதோ இடத்த அடிச்சுக்க ஆளே கிடையாது…தனி ஆளா நின்னு ஒரு பசங்க கூட்டத்தயே கலாய்க்கிற தெகிரியசாலி ஆளுங்க இவங்க..பதிலே சொல்ல முடியாத படி கேள்வி கேப்பாங்க..அதுக்கு எதிர்பாக்கவே முடியாதபடி ஒரு பதில சொல்லி நம்ம வாயடச்சுட்டு ஒண்ணுமே நடக்காத மாதிரி ஓடிப்போயிடுவாங்க..மொளச்சு மூணு இல விடாம, 1ஆங்கிளாஸ் 2ஆங்கிளாஸ் படிச்சுகிட்டு காலேஜ் போற நம்மள பாத்து இந்த பொடிசுங்க அடிக்கிற கிண்டல் இருக்கே…!!! அதுலயும் பசங்களோட மானத்த வாங்குறதுல இந்த குட்டி பொண்ணுங்களுக்கு இருக்குற ஆசயே தனி!

இப்ப எதுக்கு இத சொல்றேன்னா, நம்ம CSE ராஜேஷோட மானம் மட்டுமல்லாம என்னோட மானத்தயும் சேத்து ஒரு குட்டி பொண்ணு வாங்கிட்டு போயிட்டா..!வீரா வீட்டுக்கு வந்த உடனே, ராஜேச பாத்து, “நீங்க யாரு”ன்னு கேட்டா..சரி கொழந்த கேக்குதேன்னு ராஜேஷ், “நான் வீராவோட friend”னு சொன்னான். பதிலுக்கு அவ, “நீங்க வீராவோட friendஆ enemyஆ”ன்னு கேட்டா. “எதுக்கு இப்படி கேக்குற”ன்னு ராஜெஷ் கேட்டதுக்கு அவ சொன்ன பதில், “இல்ல, வீரா இவ்ளோ whiteஆ இருக்காரு, நீங்க இவ்ளோ blackஆ இருக்கீங்க..அதான் கேட்டேன்..!”. (முடியல..!) என்னோட மானம் போனது இன்னொரு கதை..வீரா வீட்டுக்கு வந்ததும் அவங்க வீட்ல இருக்குற chandelier லைட்ட அண்ணாந்து பாத்தேன்..அந்த பொண்ணு என்ன பாத்து ஒரு மாதிரி சிரிச்சுட்டு போனா..இத பாத்த பசங்க எல்லாம் மொத்தமா சிரிச்சுட்டாங்க..அப்றமா தான் ‘ஏதோ பட்டிக்காட்டான் மிட்டாய் கடைய பாத்த மாதிரி பாக்கறான் பாரு’னு அவ சிரிச்சுட்டு போனது எனக்கு புரிஞ்சிது..என்ன பண்றது..எல்லாம் விதி.

சின்ன பொண்ணுங்ககிட்ட மாட்டிக்கிட்டு முழிக்குறது ஒண்ணும் எனக்கு புதுசில்ல. போன வருசம், EEE சுமிதா-வோட கல்யாணத்துக்கு கோவை போயிருந்தேன். அங்க ஹரிணி’னு ஒரு சின்ன பொண்ணு என்னோட மொபைல பாத்துட்டு தரேன்னு சொல்லி வாங்கினா. அதுல கேமரா இருக்குறத பாத்ததும், மொபைல தூக்கி போட்டு உடச்சுடுவேன்னு என்ன பயமுறுத்தி, குரங்கு மாதிரி, தலைல கொம்பு வச்சு மாடு மாதிரி, funny face பண்ணி, dance ஆட வச்சு எல்லாம் photo எடுத்து ஒரு அரை மணி நேரம் எனக்கு ஒரு ட்ரில்லு குடுத்தாளே பாக்கணும், அன்னிக்கில இருந்து இன்னிக்கு வரைக்கும் கேமரா மொபைலயே தொடல..ஒரு சாதாரண FM மொபைல வச்சுகிட்டு காலத்த ஓட்டிக்கிட்டு இருக்கேன்.. :) (நல்ல வேளையா அந்த மொபைல் எங்கிட்டயே திருப்பி வந்ததால தேவை இல்லாத (!) போட்டோவை எல்லாம் deleeeet பண்ணிட்டேன்…! :) :) :) )

இன்னொரு நாள், IITல ஒரு வாண்டு கூட பேசிக்கிட்டு இருந்தேன்..என்ன பாத்து, “அங்கிள், விஜயோட பையன் நடிச்சா அந்த படத்துக்கு என்ன பேரு வப்பாங்க”னு கேட்டா. எனக்கு அந்த அளவு விவரம் பத்தாதனால தெரியலனு உண்மைய ஒத்துக்கிட்டேன். அவ சொன்னா, “அய்ய..இது கூட தெரியாதா…? குருவிக்குஞ்சு-னு வப்பாங்க” அப்டின்னு சொல்லிட்டு போனா..! (எல்லாம் என் நேரம்..!!!) 2 நாள் கழிச்சு அதே ஜொக்கு ஒரு smsஆ வந்திச்சு. ஆஹா, அதுக்குள்ள ஊருக்கே தெரிஞ்சு போச்சுயான்னு நெனச்சுக்கிட்டே நடைய கட்டுனேன்..

இதுக்கெல்லாம் மேல, கோயம்முத்தூர்ல மொதோ நாள் காலேஜுக்கு பைக்க நான் start பண்றதுக்குள்ள மாடில இருந்து அந்த சஞ்சு பையன் சிரிச்ச சிரிப்பு இருக்குதே, அதுக்கப்புறம் என்னோட புகழ் (!!!) நம்ம நண்பர்கள் மத்தியில எக்கசக்கமா எகிறிடிச்சு..! :D (முன்ன பின்ன பைக் ஓட்டி பழக்கமில்ல..அது என்னோட தப்பா என்ன..???)

சரி இந்த கதையெல்லாம் இருக்கட்டும்..கல்யாண நாள்ல நடந்த நிகழ்ச்சிய அடுத்த பதிவுல சொல்றேன்..

–to be continued…(களேபரம் தொடரும்..)

மார்ச் 4, 2009 at 9:09 பிற்பகல் மறுமொழியவும்

கல்யாண களேபரம் – Part-1

கடந்த ஞாயிற்றுக்கிழமை (Feb 22nd) வீராவோட தங்கை கல்யாணம் நடந்தது. அதுக்காக சனிக்கிழமயே நான் இங்க இருந்து தருமபுரிக்கு கிளம்பிட்டேன். Actualஆ நான் மதியான ரயில புடிச்சி போறதா தான் plan பண்ணினேன். Trainல போனாதான் receptionக்கு போய் சேர முடியும். அதோட saiயும் அந்த ரயில்ல தான் வர்றதா சொன்னான். ஆனா இந்த KP படுவா குட்டய ஒரு குழப்பு கொழப்பினான் பாருங்க…ஹய்யோ…

என்னிக்கும் இல்லாம அன்னிக்கின்னு பாத்தே 930 மணிக்கே நான் கிளம்பி ready ஆயிட்டேன். மதியம் 230 தான் ரயில் புறப்படும். அதனால் நிதானமா வேல பண்ணிட்டு இருந்தேன். 1030 மணிக்கு கிளம்பி ஒரு gold coin gift வாங்கிக்கிட்டு போலாம்னு இருந்தேன். அப்போ தான் இந்த KP phone பண்ணினான். பசங்க ஒரு ஆறு ஏழு பேர் வருவாங்கடா, அவங்களுக்கும் சேர்த்து ஒரு gift வாங்கிட்டு வந்துடு. இங்க வந்து amount share பண்ணிக்கலாம்னு சொன்னான். சரி, நண்பன் ஆசைப் பட்றானேனு அடயாறுல ஒரு gift shopக்குள்ள போனென். அழகா ஒரு modern architecture ஒண்ணு இருந்தது. அதயே வாங்கிருப்பேன், ஆனா சின்னதா ஒரு scratch இருந்ததால அத வாங்கல. வேறெதுவும் புடிக்காம Odysseyக்குள்ள போனேன். அதான் அன்னிக்கு பொழுதுக்கு நான் செஞ்ச ஒரு பெரிய தப்பு. வடிவேல் டயலாக் மாதிரி சொல்லணும்னா, ஒரு 2 மணி நேரமா முச்சு திணற திணற தேடினேன். இடைல KP “நீ ரொம்ப நல்லவன்டா”னு சொல்லி என்ன வித்தியாசமான giftஆ தேட சொன்னதுனால நேரம் போறதே தெரியாம தேடிட்டேன். :(

மணி 1அ தாண்டிடுச்சி. அப்பவே முடிவு பண்ணிட்டேன். Train miss.! அப்பறமா எதுத்தாப்ல இருக்குற நகைக்கடைக்கே போய் 2 தங்ககாசு எடுத்துட்டு ஊருக்கு கிளம்பிட்டேன். இருந்த அவசரத்துல அந்த கடையோட parkingல வண்டிய நிருத்தும் போது side stand போடாம வண்டிய விட்டு இறங்கி, வண்டி கீழ விழுந்து உஜாலா சொட்டு நீலம் மாதிரி 4 சொட்டு petrol கீழ சிந்திடிச்சு. (இதுக்காக KPகிட்ட இருந்து 4 ரூபா வசூல் பண்ணனும்னு நெனச்சேன், ஆனா மறந்துட்டேன்..! டேய் KP, 4 ரூபா ரெடியா வை. பெங்களூர் வந்ததும் வாங்கிக்குறேன்.)

அப்புறம் அப்டியே கிளம்பி கோயபேடு போய், ஒரு அல்ட்ரா டீலக்ஸ் பஸ்ஸ புடிச்சு கிருஷ்ணகிரி வரைக்கும் டிக்கட் எடுத்துட்டு உக்காந்தேன். Full soundல சிவாஜி படம் ஆரம்பிச்சுது.  ஒரு பாதி படம் ஓடியிருக்கும், என்னோட செல்லுல ஒரு call வந்துச்சு.  சத்தம் சரியா கேக்காததனால ட்ரைவர் சீட்டு பக்கத்துல போய் நின்னு பேசிக்கிட்டு இருந்தேன். (Point to be noted..speaker சத்தத்த விட என்ஜின் சத்தமே கம்மியா இருந்துச்சு…!). நாலு லேன் பை-பாஸ் ரோட்ல median பக்கத்துல இருக்குற லேன்ல ட்ரைவர் வண்டி ஓட்டிகிட்டு இருந்தார். நடத்துனர்ட்ட ஏதோ பேசிக்கிட்டு வந்த அவர், வண்டி அந்த medianஅ நோக்கி போனத கவனிக்காம விட்டுட்டார். டயர் லைட்டா ஒரு சைடு உரசி ஒரு மாதிரி சத்தம் வந்தது. நான் அய்யோனு பதறிட்டேன். எப்டியோ தாறுமாறா ஒட ஆரம்பிச்ச வண்டிய தன்னோட கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்துட்டார். 2 நொடி miss ஆயிருந்தா அன்னிக்கி எனக்கு சங்கு கூட ஊதிருப்பாய்ங்க. இது நடந்த உடனே அந்த conductor என்ன உள்ள பொய் உக்கார சொன்னார். எனக்கு அப்போ புரியல. ஆனா அதுக்கப்புறமா இன்னும் ரெண்டு தடவ அதே மாதிரி சத்தம் வந்து பஸ் கொஞ்சம் ஆட்டம் போட்டுது. அதுக்கப்புறமா தான் எனக்கு புரிஞ்சுது..! அஅண்டவா, என்ன காப்பாத்துப்பா.., பத்திரமா ஊரு போய் சேந்திட்டா KPக்கு பொது மாத்து போடறேன்னு வேண்டிக்கிட்டேன்.  ஒரு வழியா போக்கிரி படம் பாதி முடிஞ்சதுக்கபுறமா கிருஷ்ணகிரில இறக்கி விட்டாங்க. அப்பாடனு இருந்துச்சி. (Btw, போக்கிரி படம் எப்ப ஆரம்பிச்சதுன்னு கூட தெரியாது, அவ்ளோ பக்தி..! இல்ல பயம்..!!! இல்ல, ஒரு பயபக்தி’னு வச்சுக்கலாம்..!)

அங்க இருந்து ஒரு local பஸ்ஸ புடிச்சி தர்மபுரிக்கு போய் கல்யாண மண்டபத்துக்கு போனேன். நேரா KPய பாத்த உடனே, ஒரு அடி குடுக்கணும்னு பக்கத்துல போனா, என்ன பாத்த உடனே, “மச்சி, இங்க dinner கொஞ்சமா சாப்பிடு, நாம நைட்டு பரோட்டா சாப்பிட போலாம்”னு சொல்லி என் மனச மாத்திட்டான்!!!!!!!

நைட்டு 11மணிக்கு வீராவோட வீட்டுக்கு போனதுக்கபுறமா, 12 மணி போல, நானு, KP, முஜி மூணு பேரும் ஆட்டோ புடிச்சு பஸ்ஸ்டாண்டு வந்தோம்….பொரட்டா சாப்பிட….! :) அப்போதான் மனோகரனும் மதுரைல இருந்து வந்து சேந்தான். நாலு பேருமா சேந்தி 2 சந்து சுத்தி, பாத்த 3 தள்ளு வண்டிலயும் பரோட்டா இல்ல..முஜியும் மனோவும் தோசையே போதும்னு சைடு வாங்கிட்டாலும், நானும் KPயும் விடாம சுத்தி பக்கத்துல இருக்குற டவுண்பஸ்ஸ்டாண்டிக்கு வந்து அங்க ஒரு தண்ணு வண்டியில பரோட்டாவ புடிச்சிட்டோம்…!! கடை இருக்குற நிலைய பாத்துட்டு KPக்கு மனசு கேக்கல..”டேய், மொதல்ல ஒண்ணு வாங்கி ஆளுக்கு பாதி சாப்பிடலாம், நல்லா இருந்தா இன்னும் வாங்கிக்கலாம்”னு சொன்னான் (KP ரொம்ப hygienicனு எப்பயுமே படம் போடுவான்.) இத கேட்டுட்டு கடைக்காரன் ஒரு மாதிரி லுக்கு விட்டான். அப்பறம், நான் “நல்லா தான் இருக்கும், கவல படாத, உடம்புக்கு ஒண்ணும் ஆகாது”னு சொல்லி அவனுக்கு தெகிரியத்த (!!!) வரவழச்சு ஆளுக்கு ஒரு ப்ளேட் பரோட்டாவும் ஒரு முட்டையும் வாங்கி சாப்பிட்டோம்…!!! Midnightல பரோட்டா சாப்பிடற சுகமே தனிதான்! :)

அன்னிக்கு KP செஞ்ச ஒரே நல்ல காரியம், பரோட்டா சாப்பிட வந்ததுதான்..!

–to be continued…(களேபரம் தொடரும்..)

மார்ச் 1, 2009 at 6:20 பிற்பகல் மறுமொழியவும்

முதல் கடிதம்…

அனைவருக்கும் எனது வணக்கங்கள்.
இங்கு கொடுக்கப்பட்டுள்ளது, இணையதளத்தில் என்னுடைய முதல் பிம்பம். நான் வரையும் முதல் மடல். இனி வரும் காலத்தில் நான் எழுதப்போகும் தொகுப்புகளின் முன்னுறை.
இணையதளத்தில் தனது பாதங்களை பதிக்க வரும் ஒவ்வொரு மனித(தமிழ)னைப் போல, ஓர் ஆர்வக்கோளாரு காரணமாக தமிழில் எழுதத் துடிக்கும் ஒரு சாதாரணமான (ஆ)சாமி நான். ஒரு காலத்தில் “கவி”க்கு “தாச”னாக சுற்றி  திரிந்த நான், இன்று கணினிக்கு தாசனாக மாறி விட்டேன். காரணம், நான் கற்கும் கல்வி! வான்வெளிச் சாதனத் துறையில் ஆராய்ச்சி வழி முதுகலைப் பட்டம் பெற கடந்த இரண்டு ஆண்டுகளாக “கணித்தகன ஆய்வுகூட”த்தில் ஆராய்ச்சி புரியும் ஆய்வாளன் நான். கணினித்துவ முறைப்படி ஆராய்ச்சி செய்வதன் காரணமாக கணினியுடனே காலம் தள்ள தொடங்கியதால் இந்த மாற்றம்.
‘உன்னை சொல்லி குற்றமில்லை, என்னை சொல்லி குற்றமில்லை..,காலம் செய்த கோலமடி, கடவுள் செய்த குற்றமடி’ என்று ஒரு சில நேரங்களில் பாட விழைந்தாலும் “கடவுள் செய்த குற்றமல்ல, இது நான் விழைந்து சூடிக் கொண்ட சுற்றம்” என்று மனதில் ஓர் ஓசை மீண்டும் மீண்டும் ஒலித்துக் கொண்டு இருக்கும். “குற்றம்” என்று நான் உரைத்தது மாற்றத்தை அல்ல, ஆய்வை! ஆய்வாளன் நானே ஆராய்ச்சியை இவ்வாறு உரைப்பது முறையாகா. ஒவ்வொரு ஆய்வாளனும் அவன(ள)து ஆய்வு காலம் முடியும் முன்னர், குறைந்தபட்சம் ஒருசில முறைகளாவது இவ்வாறு நினைப்பது திண்ணம். பல மாதங்களாக மேற்கொண்ட ஆராய்ச்சியின் விளைவு நாம் எதிர் பார்த்தது போல் இல்லாமல் போகும் போது இவ்வாறு தோன்றும். மேலோட்டமாக பார்த்தால் இது முறையே. சற்றே உள்ளூர்ந்து சென்று உணர்ந்தால் உண்மை புலப்படும்.
ஆய்வு என்பதன் பொருளே “தேடல்” ஆகும். இல்லாத ஒன்றையோ, இன்னும் கண்டுபிடிக்கப் படாத ஒன்றையோ தேடும் தேடல் ஆகும். இருட்டில் குருடன் கண்ணைக் கட்டிக்கொண்டு யானையை தேடுவது போன்றது. நமது கையில் நமக்கு உதவியாக நாம் கற்ற கல்வி என்னும் தடி மட்டுமே இருக்கும். ஆய்வின் பலமும் பலவீனமும் இதுதான். உண்மையில் இது வெறும் பலம் மட்டுமே. தன்னிடம் உள்ள தடியை உபயோகிக்க தெரியாதவன் இந்த பலத்தை பலவீனம் என்று எண்ணுகிறான். பலவீனம் என்கிறான். அது வெறும் மாயை மட்டுமே. இந்த மாயையை உடைத்து எறிய கல்வி தடி சற்று தருணம் கொள்ளும். இச்செயலை விரைந்து செய்து முடிக்க தற்காலிகமாக வேறு தடி ஒன்றை மனம் வேண்டும். அவ்வாறு தேடி பல “தடி”களை எடுத்து, ‘சீ, சீ, இந்த பழம் புளிக்கும்!’ என்று அவைகளை விடுத்து, இறுதியாக நான் எடுத்த தடிதான் இந்த வலைப்பதிவு.
இணையதளம் எனக்கு புதிது அல்ல. இணையதள-வலைப்பதிவும் அவ்வாறே. ஏறத்தாள ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் சில முறைகள் நான் வலைப்பதிவு செய்தது இன்னும் என் நினைவில் உள்ளது. சிலப்பல காரணங்களால் அவற்றை தொடர இயலாமல் போய் விட்டது. பலச்சில காரணங்களால் இப்பொழுது இது என் பக்கம் வந்துள்ளது. என்வே இனி வரும் காலத்தில் என் மனதைப்போல், எனது அறிவைப்போல், எனது வயதைப்போல், வலைப்பதிவுகளும் விரிந்துகொண்டே செல்லும் என்று நம்பிக்கை தெரிவிக்கிறேன்.
நன்றி.

பி.கு. 1: நான் என்னை (ஆ)சாமி என்று உரைத்ததை ‘அன்பே சிவம்’ என்று நம்புவோர் அறிவர்.
பி.கு. 2: இது முன்னுரை மற்றும் முதலுறை ஆதலால் செந்தமிழில் எழுதியுள்ளேன். இனி வரும் தமிழுறைகளை வழக்குத்தமிழில் எழுத முனைகிறேன்.
பி.கு. 3: இன்று திசம்பர் மாதம் ஏழாம் நாள், எனது ஒரு தோழன் மற்றும் ஒரு தோழி ஆகியோரின் பிறந்த தினத்துடன் எனது இந்த புதிய வலைப்பதிவும் இனி பிறந்த தினம் கொண்டாடும்.
பி.கு. 4: இப்பதிவு திசம்பர் மாதம் ஏழாம் நாள் எழுதப்பட்டதாக இருந்தாலும், பத்தொன்பதாம் தேதி பதிப்பிக்கப்பட்டது. (ஏழாம் தேதி நான் பதிப்பிக்க மேற்கொண்ட முயற்சி வெற்றி பெறவில்லை. :-( அதற்காக வருந்துகிறேன்.)

December 19, 2008 at 9:11 பிற்பகல் மறுமொழியவும்


வகைகள்

  • இங்கு காண்க...

  • ஓடைகள்


    Follow

    Get every new post delivered to your Inbox.